Kind Heart - செயற்திட்ட விளக்கம்

 .






கோவிட் -19 தொற்றுநோய், 2019 டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் இன்று வரை சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக, வைரஸை பொதுமக்களுக்கு பரப்புவதன் மூலமாக உலகை மிக துர்பாக்கிய நிலைக்கு கொண்டுசெல்கிறது.

 


இதுவரையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படாத இவ் வைரஸானது, காலத்திற்கு காலம் திரிபு நிலையை அடைந்து இசைவாக்கமடைகிறது. இது இவ்வாறிருக்க, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று இன்னும் நூற்றுக்கணக்கிலானோரை தாக்கி வருகிறது. இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளால் உலகில் பல நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

 


அரசாங்கத்தினால் சமூக இடைவெளியை பேணும் முகமாகவும், தொற்று பரவலை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், செயற்திறன் கொண்டதாக காணப்படினும், குறைந்த வருமானம் பெரும் பொது மக்களுக்கு தமது வாழ்க்கை தரத்துடன் ஒப்பிடும் பொழுதும், நோய்க்கான சிகிச்சை பெறுவதிலும் பெருமளவில் இன்னல்களை சந்திப்பதோடு தற்போதைய சூழ்நிலையில் நிரந்தர வேலையில்லாமல் வாழ வைக்கிறது. 

இதன் விளைவாக, கடந்த ஆண்டுகளை விட, அதாவது 2019 இல் 8.2% ஆக இருந்த உலக வறுமை தொகை இந்த ஆண்டில் 8.6% ஆக உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. 

இந்த கணிசமாக 0.4% அதிகரிப்பினால், வறுமையில் வசிக்கும் மக்களின் சரியான வருமானமின்மையால் தங்களது பசியைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது சமீப கால ஊட்டச்சத்து குறைபாட்டு இறப்புகளுக்கு காரணமாக அமைகிறது.

 


ஒவ்வொரு தாயின் மற்றும் தந்தையின் மனதிலுள்ள உன்னத நம்பிக்கை, தன் பிள்ளைக்கு ஒளிமிகு எதிர்காலத்திற்கான சிறந்த கல்வியை வழங்குவதாகும். இந்த வைரஸ் தாக்கத்தின் காரணத்தினால் திறவாமல் காணப்படும் பாடசாலைகள் இவர்களது எதிர்கால நம்பிக்கைக்கு சவாலாக அமைவதோடு, மேலும் கல்வி முறை இப்போது இணைய வசதிகள் மூலம் நடத்தப்படுகிறது. இவ்வாறு நடத்தப்பட்டாலும், பெரும்பாலான மாணவர்களுக்கு இம்முறையானது பொருத்தமற்றதாக காணப்படும் அதேவேளை, வசதியற்று காணப்படும் சந்தர்ப்பங்களில் பெற்றோரின் ஆசைகள் அர்த்தமற்றதாவதோடு, அவர்களுடைய ஆசை மற்றும் எண்ணங்கள் சீர்குலைகிறது. இதனையடுத்து பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் கைவிடுகின்றனர்.

 

எப்பொழுதும் போலவே கொழும்பு மிட்சிட்டி றோட்டறக்ட் கழகமானது மக்கள் நலன் கருதி என்னேரமும் சமூகநல சேவைகளை முன்னெடுப்பது,


 சமூகத்திற்கு தேவையான மற்றும் தேவைப்படும்போது உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளை இம்முறையும் 'கைன்ட் ஹார்ட்' என்ற செயல்திட்டத்தின் மூலமாக சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு அவர்களது சோகத்திலிருந்து மீண்டுவர மகிழ்ச்சியுடன் உதவியாற்ற முன்மொழிந்துள்ளது என்பதனை நாம் கொழும்பு மிட்-சிட்டி றோட்டறக்ட் கழகம் என்றவகையில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



















  Penned by, Rtr.Nidhushan Ramanathan

No comments:

Post a Comment

We do great things here in the homeland and around the world!