Orange Elephant திட்டத்தின் பின்னணி

 

Orange Elephant திட்டத்தின் பின்னணி



புராதன காலம் தொட்டே யானைகள் இலங்கையின் பெருமிதமிக்க அடையாளமாக திகழ்ந்து வருகின்றன. கலாச்சார மற்றும் மதம் சார் அம்சமாக அவை முக்கிய இடத்தை பெறுகின்றன. காட்டில் வாழும் யானைகள் முதல் நாம் பெரஹெராக்களில் காணும் பின்னவல சரணாலயத்தை சேர்ந்த யானைகள் வரை அனைத்துமே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் அம்சங்களாக திகழ்கின்றன.  

வேறு எந்த ஒரு வனவிலங்கும் ஆசிய யானைகள் அளவுக்கு மனிதர்களிடம் நெருங்கி பழகியது இல்லை. இருப்பினும் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மனித-யானை முறுகலானது இலங்கை யானைகளின் எண்ணிக்கைக்கு பெரும் பின்னடைவை விளைவித்துள்ளது. இலங்கையில் காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய கொள்கை 2006 இல் மொத்த யானைகளின் எண்ணிக்கையை 4,000 என தெரிவித்தாலும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.


மனித-யானை முறுகலானது இலங்கையின் கிராமப்புறங்களில் மாபெரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார நெருக்கடியாகும். வாழ்விடம் மற்றும் வளங்களை இழப்பதால் யானைகள் பயிர்களை ஆக்கிரமிக்கின்றன, இதன் தாக்கம் இலங்கையின் உயர் விவசாய மற்றும் குறைந்த வருவாய் பகுதிகளில் பெரும்பாலும் உணரப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஆண்டு செயல்திறன் அறிக்கையின்படி, யானைகள் ஆண்டுதோறும் பத்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பயிர் மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக விவசாயிகள் யானைகளை கொள்கின்றனர். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான இந்த வாழ்வா சாவா போரின் விளைவாக, 2008 இலிருந்து இன்றுவரை ஆண்டுதோறும் 225 யானைகள் விவசாயிகளாலும், 60-80 விவசாயிகள் யானைகளால் கொல்லப்படும் அவலம் அரங்கேறிய வண்ணமே உள்ளது.

  • மனித-யானை முறுகலின் பரவலும் பாதிப்பும்

மனித-யானை மோதலை தோற்றுவிக்கவும் அதிகரிக்கவும் பங்களிக்கும் காரணிகளில் காடழிப்பு, அதிகரித்து வரும் சனத்தொகை, நகரமயமாக்கல், கிராமப்புற வறுமை, வேளாண் சார்ந்த பொருளாதாரத்தால் ஏற்படும் யானைகளின் வாழ்விட இழப்பு மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கூறிட்டு பிரித்தல் ஆகியன அடங்கும்.

இலங்கையின் வளமான மரபணு வேறுபாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் யானைகளுக்கான இலங்கை பிராந்திய பாதுகாப்புப் பகுதிகள் (PAs) நிறுவப்பட்டுள்ளன. யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆனது வனவிலங்கு பாதுகாப்புத் துறை (DWC) மற்றும் இலங்கையில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கீழ் வருகிறது. இந்த நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதி இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 28% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் கொள்கை வகுப்பாளர்களிடையே சுற்றுச்சூழல் அமைப்புகளில் நிபுணத்துவம் இல்லாமை மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி (PA) நிர்வாகத்தின் சிக்கல்கள் ஆகியவற்றால் மேற்கண்ட பிணக்குகள் மேலும் சிக்கலானவையாக உருக்கொள்கின்றன.


  • மனித-யானை முறுகலின் சமீபத்திய அதிகரிப்பு

1998 ஆம் ஆண்டிலிருந்து யானைத் தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று இலங்கையின் சிறப்பு பாதுகாப்பு மையம் (SCC) தெரிவித்துள்ளது. வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனுராதபுர மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 2016 ஆம் ஆண்டில் யானை தாக்குதலால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் யானைத் தாக்குதல்களால் அதிக எண்ணிக்கையிலான சொத்து சேதங்கள் கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பதிவாகியுள்ளன. இதற்கு பல காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

·       யானைக் குடியேற்றங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மனித குடியிருப்புகளை நிறுவுதல்

போருக்குப் பிந்தைய காலத்தில் வில்பத்து போன்ற நியமிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் போன்ற சமூக மற்றும் அரசியல் காரணிகளால் யானைகளின் இறப்பு அதிக கவனத்தை ஈர்த்தது. தேசிய காணி மேம்பாட்டு சட்டப்படி, வட மத்திய மாகாணத்தில் உள்ள பதவியா சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நில உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன, இது அதிக குடியிருப்புகளை அப்பகுதியை நோக்கி ஈர்த்தது. இதன் விளைவாக மனித-யானை ஊடாடல் கணிசமாக அதிகரித்தது.

மனித குடியிருப்புகளால் யானைகள் தங்கள் வழக்கமான வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்து வருவதால், அவை உயிர்வாழ்வதற்காக பயிர்ச்செய்கைகளை நம்பத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, யானைகள் பாரம்பரிய யானைக் கட்டுப்பாட்டு முறைகளான நெருப்பு, எளிய தடைகள் மற்றும் பயிர்களைப் பாதுகாக்க கிராமவாசிகள் பயன்படுத்தும் கோப்பி தண்ணீர் முறைகள் ஆகியவற்றுக்கேற்ப இசைவாக்கமடைந்து விட்டன. பின்னர் கிராமவாசிகள் யானைக் கன்றுகளை கட்டுப்படுத்த அவற்றை துப்பாக்கியால் சுடுதல் (2016 இல் 52 வழக்குகள்), மின்கலத்திலுள்ள அமிலம் / நைட்ரிக் அமிலத்தை அவற்றின் மீது ஊற்றுவது அல்லது காய்கறிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை வைத்தல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் புரிய ஆரம்பித்தமையை காணலாம்.

கூடுதலாக, சுற்றியுள்ள அனைத்து புல்வெளிகளிலும் கால்நடைகள் மற்றும் எருமைகளின் மேய்ச்சலை அதிகரிப்பது யானைகளுக்கு உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். யானைகளுக்கேயுரிய எல்லைப்படி வாழும் பழக்கத்தை புறக்கணிப்பது மற்றும் திட்டமிடப்படாத தற்காலிக வளர்ச்சி நடவடிக்கைகளுடன் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.



இலங்கையில் ஒரு விரிவான கழிவு மேலாண்மைக் கொள்கை இல்லாத நிலையில், வனத்தில் குப்பைகள் போடுதலால் யானைகள் உணவு தேடும்போது பொலித்தீனை உட்கொள்வதற்கும், தம்புள்ளை மற்றும் திகம்பதன பகுதிகளில் மாசுபடுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேர்வதால் நோய்வாய்ப்பட்டமை அறிக்கையிடப்பட்டுள்ளது. இதேபோல், புத்தல-கதிர்காமம் சாலை போன்ற சாலைகளில் யானைகளுக்கு உணவளிப்பது யானைகள் இயற்கையாகவே உட்கொள்ளாத உணவின் சுவைக்கு பழக்கமாகி, அவற்றின் உடலுடன் ஒத்துப்போக உதவுகிறது. இதன் விளைவாக, யானைகள் இதேபோன்ற உணவைத் தேடி கிராமங்களுக்கு வரத் தொடங்குகின்றன, துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற உணவைத் தொடர்ந்து சாப்பிடுவது அவற்றின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது (உ-ம். கதிர்காமம்  ஆலயத்திற்கு வரும் யாத்திரீகர்கள் உணவு வழங்குதல்)



·       காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வளப்பற்றாக்குறை

ஒழுங்கற்ற, கன மழை மற்றும் நீடித்த வறட்சி போன்ற காலநிலை மாற்றங்களும் மனித-யானை முறுகல்களுக்கு பங்களிக்கின்றன. நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை இருக்கும்போது, யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்கான தமது எல்லையை விரிவுபடுத்துகின்றன, மேலும் அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலிருந்து மனித வாழ்விடங்களை நோக்கி நகர்கின்றன.

பருவகால வகைப்பாடுகளின்படி, ஏப்ரல், மே மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான யானைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. பயிர்ச்செய்கை மீதான தாக்குதல் மீடிறனும் இக்காலத்தில் அதிகம்.

இந்த பின்னணியில்தான், Orange Elephant திட்டமானது அதிகரித்து வரும் மனித-யானை முறுகலால் கொண்டுவரப்பட்ட பரந்த சமூக மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான நேர்மறையான மற்றும் நீண்டகால பார்வையுடன் வெளிக்கொணரப்படுகிறது.

மனித-யானை முறுகலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள கொழும்பு மிட் சிட்டி ரோட்டராக்ட் கிளப்பின் Orange Elephant திட்டம் குறித்த உடனடி தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள், ஆனால் இத்திட்டமானது அதையும் மீறி இது தொடர்பான சிக்கல்கள் பலவற்றில் கவனம் செலுத்துகிறது.


No comments:

Post a Comment

We do great things here in the homeland and around the world!